சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம் குறித்த பட்ஜெட் கருத்தரங்கிற்கு சுரங்க அமைச்சகம் நாளை ஏற்பாடு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 13 AUG 2024 6:04PM by PIB Chennai

மத்திய அரசின் சுரங்க அமைச்சகம், "தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம் குறித்த பட்ஜெட் கருத்தரங்கை 2024, ஆகஸ்ட் 14  அன்று புதுதில்லி தாஜ் மஹால் ஹோட்டலில் நடத்த உள்ளது.

இந்த முயற்சி 2024-25 மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கத்தை வெளியிட்டதையடுத்து நடைபெற்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான மூலப்பொருட்களில் சுயசார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தை முன்னேற்றுவதற்கும் இந்த இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேசிய முக்கிய கனிமங்கள் இயக்கம் நாட்டின் முக்கிய கனிம மதிப்பு வாய்ப்பை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் கருத்தரங்கு, தொழில்துறை தலைவர்கள், புதுமையான புத்தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடையோர்களை ஒன்றிணைக்கும்.

நாட்டின் முக்கிய கனிமங்கள் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் இந்த முக்கியமான கருத்தரங்கில் ஈடுபட சம்பந்தப்பட்ட அனைவரையும் சுரங்க அமைச்சகம் அழைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044914

***

IR/RS/DL


(रिलीज़ आईडी: 2044984) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP