மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
13 கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எந்திரம் மற்றும் விசைப்படகுகள் உட்பட கடல் மீன்பிடி படகுகளில் 1,00,000 டிரான்ஸ்பாண்டர்கள் நிறுவப்படும்: திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
प्रविष्टि तिथि:
13 AUG 2024 5:47PM by PIB Chennai
விக்ரம் லேண்டரை பாதுகாப்பாகவும் மென்மையாகவும் தரையிறக்கிய சந்திரயான் -3 திட்டத்தின் வரலாற்று சாதனையை அங்கீகரிப்பதற்காக மத்திய அரசு ஆகஸ்ட் 23 ஆம் தேதியை, "தேசிய விண்வெளி தினமாக" அறிவித்தது. இந்த சாதனை நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியாவை திகழச்செய்தது. இந்த வரலாற்றுச் சாதனையை நினைவுகூரும் வகையில், மத்திய அரசின் மீன்வளத்துறை, மீன்வளத் துறையில் விண்வெளி தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர் கருத்தரங்குகள் மற்றும் செயல்முறை விளக்கங்களை நடத்தி வருகிறது. பல்வேறு கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், இஸ்ரோ மற்றும் மீன்வளத்துறை கள அலுவலகங்களுடன் இணைந்து இந்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, பல்வேறு கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 4,000-க்கும் மேற்பட்டோர் காணொலிக் காட்சி முறையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, மீன்வளத் துறை புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் "மீன்வளத் துறையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு" குறித்த கருத்தரங்கை இன்று ஏற்பாடு செய்தது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் மற்றும் பிற பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
சந்திரயான்-3 திட்டத்தின் சிறப்பான வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மீன்வளத் துறையுடன், குறிப்பாக கடல்சார் துறையில், விண்வெளி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க மீன்வளத் துறை (GoI) மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். கடலில் மீன்பிடி படகுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அவசியமான கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்காக இந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
ரூ.364 கோடி நிதி ஒதுக்கீட்டில், 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்திரம் மற்றும் விசைப்படகுகள் உட்பட கடல் மீன்பிடி படகுகளில் 1,00,000 டிரான்ஸ்பாண்டர்கள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044893
***
IR/RS/DL
(रिलीज़ आईडी: 2044976)
आगंतुक पटल : 94