அணுசக்தி அமைச்சகம்
தேசிய அணுசக்தி மேலாண்மை அமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு- ஜம்மு-காஷ்மீரில் லித்தியம் கனிம ஆய்வை விரைவுபடுத்த அழைப்பு விடுத்தார்
Posted On:
12 AUG 2024 8:25PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் (என்எம்இடி) அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டத்தில், மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். 6-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டியும் பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் லித்தியம் கனிம ஆய்வை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது சுரங்க பொருளாதாரத்திலும் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு பெரிய வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.
லித்தியம் ஆய்வுப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், அடுத்த சில மாதங்களில் அதன் வெளியாகும் என்றும் மத்திய சுரங்கத் துறை செயலாளர் வி.எல்.காந்தா ராவ் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் உறுதியளித்தார்.
உள்நாட்டு உற்பத்தி, முக்கியமான கனிமங்களின் மறுசுழற்சி போன்ற பணிகளுக்காக "முக்கிய கனிமங்கள் இயக்கம்" தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த இயக்கத்தில் என்எம்இடி மிக முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சுரங்கத் துறையில் தனியார் துறையினரையும் ஈடுபடுத்தி கனிமங்களைக் கண்டறியும் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
நாம் அனைவரும் முன்வந்து மேலும் பல கனிம ஆய்வுத் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும், இதனால் அதிக எண்ணிக்கையிலான கனிம தொகுதிகள் ஏலத்திற்கு கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.
குஜராத், ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், மத்திய நிலக்கரி, பெட்ரோலிய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
******
(Release ID: 2044691)
PLM/RR
(Release ID: 2044749)
Visitor Counter : 30