சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நாளை போதை இல்லாத பாரதம் இயக்க உறுதிமொழியை டாக்டர் வீரேந்திர குமார் செய்துவைக்கிறார்

Posted On: 11 AUG 2024 5:38PM by PIB Chennai

இந்தியா தனது 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், போதை இல்லா பாரதம் இயக்கம் ஐந்தாவது ஆண்டில் நுழைகிறது. இந்த மைல்கல்லை அங்கீகரிக்கும் வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக ஒரு மாபெரும் உறுதிமொழி எடுக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், 2024 ஆகஸ்ட் 12 அன்று புதுதில்லி, பாரகம்பா சாலையில் உள்ள நவீன பள்ளி மாணவர்களுக்கு இந்த இயக்கம் பற்றிய வெகுஜன உறுதிமொழியை செய்து வைப்பார். . இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் 'போதையிலிருந்து விடுபட வேண்டும் என்பது வளர்ந்த பாரதத்தின் தாரக மந்திரம்’ என்பதாகும்.

மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆடை அலங்கார நிறுவனங்கள், தேசிய மாணவர் படை, நேரு யுவ கேந்திரா சங்கம் மற்றும் இதர பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை எடுக்க ஆன்லைனில் பங்கேற்க உள்ளனர்.

போதைப் பொருள் பயன்பாட்டுக் கோளாறு என்பது நாட்டின் சமூக கட்டமைப்பை மோசமாக பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எந்தவொரு பொருளையும் சார்ந்திருப்பது தனிநபரின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பம் மற்றும் முழு சமூகத்தையும் சீர்குலைக்கிறது. பல்வேறு மனோவியல் பொருட்களின் வழக்கமான நுகர்வு தனிநபரின் சார்புக்கு வழிவகுக்கிறது. சில பொருள் கலவைகள் நரம்பியல்-மனநல கோளாறுகள், இருதய நோய்கள், அத்துடன் விபத்துக்கள், தற்கொலைகள் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே, பொருள் பயன்பாடு மற்றும் சார்பு ஒரு உளவியல்-சமூக-மருத்துவ பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டும்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்த இயக்கத்தை 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தியது. இது ஆகஸ்ட் 2023 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.இந்தல இயக்கம்  மக்களைச் சென்றடையவும், போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்பவும் விரும்புகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, அவர்களைச் சார்ந்துள்ள மக்களை அடையாளம் காண உதவுகிறது. மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்களில் ஆலோசனை மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குதல் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை எளிதாக்குதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.

****

PKV/DL


(Release ID: 2044319) Visitor Counter : 82