அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விவசாயிகள், கைவினைஞர்கள் பயன் அடையும் வகையில் தேசிய புவிசார் தரவுக் களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
10 AUG 2024 6:45PM by PIB Chennai
புதுதில்லி பிரித்வி பவனில் இன்று (10.08.2024) நடைபெற்ற மத்திய அரசின் அனைத்து அறிவியல் சார்ந்த அமைச்சகங்கள், துறைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய புவியியல் தகவல் களஞ்சியம் தொடர்பாகவும் இதில் அரசு-தனியார் பங்களிப்பு முன்முயற்சி குறித்தும் கருத்துகளை முன்மொழிந்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், விவசாயிகள், கிராமப்புற கைவினைஞர்கள் போன்றோரின் நலனுக்காக புதுமையான, உள்நாட்டு தயாரிப்புகளை உருவாக்குவதற்காக தொழில்துறை, புத்தொழில் சூழல் அமைப்பைப் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த புவிசார் இடம்சார்ந்த இடைமுகத்தை உருவாக்குமாறு விண்வெளித் துறை, அறிவியல்- தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல்துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தினார்.
புவி-தகவல் தொடர்பு தொழில்நுட்ப கட்டமைப்புக்கு தடையற்ற தகவல் இணைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார். அரசு-தனியார் பங்களிப்பு முறையில் அரசு சாரா துறைகளுடன் இணைந்து அறிவு ஆதாரங்களை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
பொது நோக்கத்தை அடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஏ.கே.சூட், அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் திரு அபய் கரண்டிகர், செயலாளர், உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, புவி அறிவியல் துறை செயலாளர், திரு ரவிச்சந்திரன், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் என் கலைச்செல்வி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றார்.
****
PLM/DL
(Release ID: 2044154)
Visitor Counter : 40