நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

Posted On: 09 AUG 2024 7:33PM by PIB Chennai

2024 ஜூலை 22 திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், (9 ஆகஸ்ட் 2024) உடன் மறுதேதி குறிப்பிடாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 18-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, இது முதல் பட்ஜெட் அமர்வாகும், மேலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்ஜெட்டுடன், மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதம் இரு அவைகளிலும் நடைபெற்றது. இதனால் மக்களவைக்கு ஒதுக்கப்பட்ட 20 மணி நேரத்திற்கு பதிலாக 27 மணி நேரம் 19 நிமிடங்களும், மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்ட 20 மணி நேரத்திற்கு பதிலாக, 22 மணி நேரம் 40 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டன. 2024-25 ஆம் ஆண்டுக்கான ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் -2024-25 தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை மக்களவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான பொது விவாதத்துடன் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மக்களவையில், ரயில்வே, கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகங்கள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் தனித்தனியாக விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து அமைச்சகங்கள்/துறைகளின் மானியங்களுக்கான எஞ்சிய கோரிக்கைகள், 2024 ஆகஸ்ட் 05 ஆம் தேதி திங்கட்கிழமை சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இது தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாவும் 05.08.2024 அன்றே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நிதி (எண் 2) மசோதா, 2024 மக்களவையில் 6மற்றும் 7 ஆகஸ்ட் 2024 அன்று பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மற்றும் நிதி (எண் 2) மசோதா, 2024 ஆகியவை தொடர்பான ஒதுக்கீட்டு மசோதாக்களை மாநிலங்களவை 08.08.2024 அன்று திருப்பி அனுப்பியது.

விமானங்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வகை செய்யும் பாரதிய வாயுயன் விதேயக், 2024- மக்களவை 09.08.2024 அன்று நிறைவேற்றியது.

"வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவின் தயார்நிலை" மற்றும் "அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் இறந்த துயர சம்பவம்" குறித்து முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட நிலைமை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானங்கள், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 09.08.2024 அன்று பரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

மக்களவை / மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றின் பட்டியல் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

 

2024 பட்ஜெட் அமர்வின் போது மக்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 136% ஆகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 118% ஆகவும் இருந்தது.

***

 

இணைப்பு

18-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடரிலும், மாநிலங்களவையின் 265-வது கூட்டத்தொடரிலும் பரிவர்த்தனை செய்யப்பட்ட அலுவல்களின் விவரம்:

1. மக்களவையில் தாக்கல் செய்யும் மசோதாக்கள்

நிதி (எண்.2) மசோதா, 2024

ஜம்மு-காஷ்மீர்  நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024

பாரதிய வாயுயன் விதேயக், 2024

பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா, 2024

கோவா மாநில  சட்டமன்றத் தொகுதிகளில் ஷெட்யூல்டு பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, 2024

 நிதி ஒதுக்கீட்டு (எண் .2) மசோதா, 2024

வக்ஃப் (திருத்த) மசோதா, 2024

முசல்மான் வக்ஃப் (ரத்து செய்தல்) மசோதா, 2024

வங்கி சட்டங்கள் (திருத்த) மசோதா, 2024

கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்வது பில், 2024

லேடிங் மசோதா, 2024

ரயில்வே (திருத்த) மசோதா, 2024

2. மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள்

எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024

கொதிகலன்கள் மசோதா, 2024

3.மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024

நிதி ஒதுக்கீட்டு (எண் .2) மசோதா, 2024

நிதி (எண்.2) மசோதா, 2024

பாரதிய வாயுயன் விதேயக், 2024

4. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024.

நிதி ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா, 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

நிதி (எண்.2) மசோதா, 2024

5. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

ஜம்மு-காஷ்மீர் நிதி ஒதுக்கீட்டு (எண் 3) மசோதா, 2024.

நிதி ஒதுக்கீட்டு (எண் 2) மசோதா, 2024, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

நிதி (எண்.2) மசோதா, 2024

6. மாநிலங்களவையில் திரும்பப் பெறப்பட்ட மசோதாக்கள்

வக்ஃப் சொத்துக்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்), மசோதா, 2014

***

MM/AG/DL



(Release ID: 2043910) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Marathi