ஊரக வளர்ச்சி அமைச்சகம்

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாதனைகள்

Posted On: 09 AUG 2024 5:50PM by PIB Chennai

கிராமப்புற ஏழைப் பெண்களை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களது வருமானத்தைக் கணிசமாக அதிகரிக்கும் வரை அவர்களைத் தொடர்ந்து வளர்த்து ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் நாடு முழுவதும் (தில்லி மற்றும் சண்டிகர் நீங்கலாக) செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், மோசமான வறுமையிலிருந்து வெளியே வர உதவுவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளன. 2024 ஜூன் 30-ம் தேதி  நிலவரப்படி, 28 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள 742 மாவட்டங்களில் 7135 வட்டாரங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10.05 கோடி பெண்களை, 90.86 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களில் திரட்டியுள்ளது.

இத்திட்டம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், முக்கியமான நிதி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் வளங்களை வழங்கும் சமூக நிறுவனங்களை வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான முயற்சியாகும். இது சமூக நடத்தை மாற்ற தகவல் தொடர்பு மூலம் சமூக உள்ளடக்கத்தை வலியுறுத்துகிறது. தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கம்  போன்ற அரசுத் திட்டங்களுக்கான அணுகலை எளிதாக்குகிறது. இது பல துறை ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது. இந்தத் திட்டம் மலிவான வங்கிச் சேவைகளை குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில், டிஜிட்டல் நிதி மூலம் வழங்குவதன் வாயிலாகவும், சுய உதவிக் குழு பெண்களுக்கு வங்கி தொடர்பாளர் பயிற்சி அளிப்பதன் மூலமும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது. தீன்தயாள் அந்தியோதயா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை மற்றும் பண்ணை அல்லாத வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்து, பெண் விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுச்சூழல் நடைமுறைகள் மற்றும் சந்தை அணுகல் மூலம் அதிகாரம் அளித்து, ஸ்டார்ட்-அப் கிராமிய தொழில்முனைவோர் திட்டம் மற்றும் அத்ஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற குறுந்தொழில்களை ஊக்குவிக்கிறது. மேலும், சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்சி பெற்ற சமூக வள நபர்களாக ஈடுபடுத்துதல் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நிதியம் மூலம் சாதகமான கடன் விதிமுறைகளை வழங்குதல் ஆகியவை பெண்களின் பொருளாதார வலுவூட்டலை வலுப்படுத்துவதோடு கிராமப்புற பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர்டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலைத் தெரிவித்தார்.

----

PKV/KPG/DL



(Release ID: 2043908) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi