ஆயுஷ்
லடாக்கில் ஆராய்ச்சி மையம்
प्रविष्टि तिथि:
09 AUG 2024 5:35PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம், யூனியன் பிரதேசமான லடாக் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவத் தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நிலையான மேலாண்மை குறித்த மத்திய துறை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இதன் கீழ் பல்வேறு வகையான மூலிகைத் தோட்டங்களை உருவாக்கவும், வனப்பகுதிகளில் மருத்துவத் தாவரங்களின் பாதுகாப்பு, வளங்களைப் பெருக்கவும் திட்ட அடிப்படையிலான ஆதரவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் லடாக்கின் லே, சோக்லாம்சரில் உள்ள பௌத்த ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனத்தின் வளாகத்தில் மூலிகைத் தோட்டம் நிறுவுதல் என்ற திட்ட முன்மொழிவுக்கு ரூ.1.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், லடாக்கின் குளிர் பாலைவனங்களில் பாதுகாப்பு நிலை, ஜெர்ம்பிளாசம் சேகரிப்பு மற்றும் முன்னுரிமை மருத்துவத் தாவரங்களின் வளங்களை அதிகரித்தல் தொடர்பான திட்டம் ரூ.156.84 லட்சம் ஒப்புதலுடன் ஆயுஷ் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சோவா-ரிக்பா தேசிய நிறுவனம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
டிரான்ஸ் ஹிமாலயாவின் சில அருகிவரும் மற்றும் வணிக ரீதியாக சாத்தியமான மருத்துவ தாவரங்களின் சாகுபடி ஆய்வு மற்றும் லடாக்கின் லேவில் உள்ள தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தில் தரமான ஜெர்ம்பிளாசம் உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 39.686 லட்சம் ஒப்பளிக்கப்பட்ட தொகையில் ஆதரவு அளிக்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
PKV/KPG/DL
(रिलीज़ आईडी: 2043878)
आगंतुक पटल : 50