கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சிறு துறைமுகங்களை மேம்படுத்துதல்
Posted On:
09 AUG 2024 1:05PM by PIB Chennai
பெரிய துறைமுகங்கள் (பெரிய துறைமுகங்கள் அல்லாத சிறு துறைமுகங்கள்) நீங்கலாக மற்ற துறைமுகங்கள் அந்தந்த மாநில கடல்சார் வாரியங்கள் மாநில அரசுகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. பொன்னானி கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய துறைமுகம் அல்ல. கேரள கடல்சார் வாரியம், சாகர்மாலா திட்டத்தின் கீழ் பகுதி உதவியாக மொத்தம் ரூ .20 கோடி செலவில் பொன்னானியில் பல்நோக்கு கப்பல் கட்டுவதற்கான முன்மொழிவை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
பிராந்திய இணைப்பு, கப்பல் சுற்றுலா திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கேரள அரசு பொன்னானி துறைமுகத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அடிப்படையில் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. பல்வேறு சிறு துறைமுகங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் துறைமுகங்களை இணைக்கும் வகையில் சொகுசு கப்பல் போக்குவரத்தை தொடங்க தனியார் சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
-----
PKV/KPG/KR/DL
(Release ID: 2043841)