சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் பற்றிய அண்மைத் தகவல்கள்

Posted On: 09 AUG 2024 1:15PM by PIB Chennai

பிப்ரவரி 2018 இல், இந்திய அரசு டிசம்பர் 2022 க்குள் நாடு முழுவதும் 1,50,000 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை (முந்தைய ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்) நிறுவுவதாக அறிவித்தது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் ஏஏஎம் வலைதளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளபடி, மொத்தம் 1,73,881 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் நிறுவப்பட்டு 31.07.2024 வரை செயல்படுத்தப்பட்டுள்ளன, இதன் மூலம் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் தற்போதுள்ள துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் தடுப்பு உள்ளிட்ட முழுமையான 12 தொகுப்பு சேவைகளுடன் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குகின்றன.

31.07.2024 நிலவரப்படி, மாவட்ட வாரியாக செயல்படும் ஏஏஎம்-களின் எண்ணிக்கை httpsab-hwc.nhp.gov.inHomeImplementation_hwc_state-யில் தெரியும்.

31.07.2024 நிலவரப்படி இந்த ஏஏஎம்களில் மொத்தம் 317.34 கோடி பார்வையாளர்கள் வருகை பதிவாகியுள்ளது.மொத்தம் 84.28 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மொத்தம் 74.18 கோடி நீரிழிவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மொத்தம் 49.88 கோடி வாய் புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, மொத்தம் 22.87 கோடி மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, மொத்தம் 15.13 கோடி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, யோகா உள்ளிட்ட மொத்த ஆரோக்கிய அமர்வுகள் 3.98 கோடி மற்றும் 31.07.2024 நிலவரப்படி 26.39 கோடி தொலை ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.

--

PKV/KPG/KR/DL



(Release ID: 2043796) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP