கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார பேருந்துகள் உற்பத்தி
Posted On:
09 AUG 2024 3:47PM by PIB Chennai
பொதுப் போக்குவரத்துக்காக, மின்னணுப் பேருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஆணைகளை மாநில அரசிடமிருந்து அரசு பெறவில்லை. கனரக தொழில்துறை அமைச்சகம்(MHI) மின்சாரப் பேருந்துகளின் உற்பத்தி அல்லது உற்பத்தியின் எந்தவொரு வணிகத்திலும் ஈடுபடவில்லை.
இருப்பினும், இந்தியாவில் மின்சார / கலப்பின வாகனங்களை (xEVs) ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக கனரக தொழில்துறை அமைச்சகம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் (ஹைப்ரிட் &) மின்சார வாகனங்களின் (FAME India) விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தியை வகுத்தது. இத்திட்டத்தின் முதல் கட்டம் ரூ.895 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2019மார்ச் 31 வரை கிடைத்தது. மேலும், ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2019 ஏப்ரல் 1முதல் 5 ஆண்டு காலத்திற்கு ரூ.11,500 கோடி மொத்த பட்ஜெட் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 425 மின்சார மற்றும் கலப்பின பேருந்துகளை, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டது. இதன் விவரம் இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 6862 மின்சாரப் பேருந்துகள் பல்வேறு நகரங்கள் / அரசு போக்குவரத்துக் கழகங்கள் / CTUக்கள் / மாநில அரசு நிறுவனங்களுக்கு, நகரங்களுக்கு உள்ளேயும் நகரங்களுக்கு இடையேயும் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. 6,862 மின்சார பேருந்துகளில், 06.08.2024 நிலவரப்படி 4,901 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன் விபரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2043781)
Visitor Counter : 47