சுற்றுலா அமைச்சகம்
தமிழ்நாட்டில் உள்ள வேட்டைக்காரன் புதூர், உல்லாடா ஆகிய கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
Posted On:
08 AUG 2024 2:03PM by PIB Chennai
கலாச்சார மற்றும் இயற்கை சொத்துக்களைப் பாதுகாக்கும், சமூக அடிப்படையிலான மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மைக்கான தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரு சுற்றுலாத் தலத்தை சிறந்த முன்மாதிரியாகக் கொண்ட ஒரு கிராமத்தை கௌரவிப்பதற்காக, சுற்றுலா அமைச்சகம், சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியைத் தொடங்கியது. பின்வரும் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன:
(i) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – பாரம்பரியம்
(ii) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – வேளாண் சுற்றுலா
(iii) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – கைவினை
(iv) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – பொறுப்புமிக்க சுற்றுலா
(v) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – வலிமையான கிராமங்கள்
(vi) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – சாகச சுற்றுலா
(vii) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – சமுதாயம் சார்ந்த சுற்றுலா
(viii) சிறந்த சுற்றுலா கிராமங்கள் – ஆரோக்கியம்
விண்ணப்பங்கள் https://www.rural.tourism.gov.in இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டது.
2023-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது சிறந்த சுற்றுலா கிராம போட்டியில், மொத்தம் 35 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள வேட்டைக்காரன் புதூர். உல்லாடா ஆகிய கிராமங்களும், புதுச்சேரியில் திருநள்ளார் கிராமமும், சிறந்த சுற்றுலா கிராமங்களாக வெண்கலப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2043020
***
IR/RS/KR/DL
(Release ID: 2043321)
Visitor Counter : 65