பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படை) தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்

Posted On: 08 AUG 2024 3:59PM by PIB Chennai

அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் இன்று ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப்படை) தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். கொடி அதிகாரி 27 ஜூன் 1987 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார்.

 

இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, கொடி அதிகாரி மேற்கு கடற்படை தளத்தின் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். இந்திய கடற்படையின் முதன்மை மருத்துவமனைகளான .என்.எச்.எஸ் அஸ்வினி மற்றும் .என்.எச்.எஸ் சஞ்சீவனி ஆகியவற்றிற்கும் அவர் தலைமை வகித்துள்ளார்.

 

புனேவின் மதிப்புமிக்க ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் கபூர், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்.

 

அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் கபூருக்கு நாவோ சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக கடற்படைத் தளபதி மற்றும் கொடி அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப் (மேற்கு) ஆகியோரால் அவர் இரண்டு முறை பாராட்டப்பட்டார்.

***

PKV/RR/K/DL


(Release ID: 2043314) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP