வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு

Posted On: 08 AUG 2024 4:29PM by PIB Chennai

தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம் 2032-ம் ஆண்டுக்கான போக்குவரத்து குறித்த செயல்பாட்டுத் திட்டத்தை' தயாரித்தது. இது தில்லியில் ரயில் அடிப்படையிலான இணைப்பை மேம்படுத்துவதற்காக தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பல்வேறு முக்கிய நகரங்களை பகுதி-அதிவேக ரயில் அடிப்படையிலான பயணிகள் போக்குவரத்து அமைப்புடன் இணைக்க எட்டு பிராந்திய விரைவான போக்குவரத்து அமைப்பு பகுதிகளை அடையாளம் கண்டது, அதாவது (i) தில்லி-குருகிராம்-ரேவாரி-ஆல்வார் (ii) தில்லி-காசியாபாத்-மீரட் (iii) டெல்லி-சோனிபட்-பானிபட் (iv) டெல்லி-ஃபரிதாபாத்-பல்லப்கர்-பல்வால் (v) தில்லி-பகதூர்கர்-ரோஹ்தக் (vi) டெல்லி-ஷாஹ்தாரா-பராவுத் (vii) காசியாபாத்-குர்ஜா மற்றும் (viii) காசியாபாத்-ஹப்பூர்.

முந்தைய இந்திய திட்டக் குழுவால் (தற்போது நித்தி ஆயோக்) நியமிக்கப்பட்ட பணிக்குழு, பின்வரும் மூன்று பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு வழித்தடங்களை செயல்படுத்த முன்னுரிமை அளித்தது. இவற்றில் 82.15 கிலோமீட்டர் நீளமுள்ள தில்லி-காஸியாபாத்-மீரட் வழித்தடத்திற்கு மத்திய அரசு 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2043166

----------

IR/RS/DL


(Release ID: 2043310)
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP