சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய தூய்மையான காற்று திட்டம்
Posted On:
08 AUG 2024 1:21PM by PIB Chennai
தேசிய தூய்மையான காற்று திட்டம் (NCAP) 2019 ஜனவரியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால், (MoEF&CC) 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள காற்றுத் தரத்தை அடையாத 131 நகரங்கள் மற்றும் மில்லியனுக்கும் அதிகமான நகரங்கள் / நகர்ப்புற கூட்டுப்பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்தி தொடங்கப்பட்டது. 2017-18-ம் ஆண்டின் அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-க்குள் பிஎம் 10 செறிவுகளில் 20-30% குறைக்க என்சிஏபி நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26 க்குள் PM10 அளவுகளில் 40% குறைப்பு அல்லது தேசிய தரங்களை (60 μg / m³) பூர்த்தி செய்ய இலக்கு திருத்தப்பட்டது. குறிப்பிட்ட செயல் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் வருடாந்திர PM10 செறிவைக் குறைக்க 4-15% வரை நகரத்திற்கான இலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நல்ல நாட்களில் (காற்றின் தரக் குறியீடு <200) 15% அதிகரிப்பதற்கான வருடாந்திர இலக்கு 49 மில்லியனுக்கும் அதிகமான நகரங்கள் / நகர்ப்புற கூட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா ஆகிய நான்கு நகரங்கள், இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, 15-வது நிதிக்குழு, மில்லியன் பிளஸ் நகரங்கள் சவால் நிதியின் கீழ் நிதியளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகரங்களுக்கு 2023-24 வரை ரூ.1085.42கோடிவழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள நகரங்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள்இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் நான்கு நகரங்களும் 2017-18 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டில் பிஎம் 10 அளவுகள் 21-40% வரை குறைந்துள்ளன. குஜராத் நகரங்களில் காற்றின் தர மேம்பாடு குறித்த விவரங்கள்இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2043272)
Visitor Counter : 78