கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

Posted On: 07 AUG 2024 4:51PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ஒழுங்குமுறை மற்றும் இணக்க சிக்கல்கள், நிதி சவால்கள், செயல்பாட்டு சிக்கல்கள், நிர்வாக சிக்கல்கள், உள்கட்டமைப்பு பிரச்சினைகள், தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற பல சிரமங்களை எதிர்கொள்கின்றன. இந்த சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு தசாப்தங்களில் இத்தகைய வங்கிகளின் எண்ணிக்கை சுமார் 400 குறைந்துள்ளது, 2004-ஆம் ஆண்டில் மொத்தம் 1926  வங்கிகள் இருந்த நிலையில், 2024 இல்  இந்த எண்ணிக்கை சுமார் 1500 ஆக குறைந்துள்ளது.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (என்.யு.சி.எஃப். டி.சி) என்ற குடை அமைப்பு கூட்டு வலிமையை மேம்படுத்துதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் சகாப்தத்தின் சிக்கல்களை திறம்பட வழிநடத்த உறுப்பு வங்கிகள் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் கூட்டுறவு வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கித் துறையை கணிசமாக மேம்படுத்துவதற்கான ஆற்றலை என்.யு.சி.எஃப். டி.சி கொண்டுள்ளது; அதன் செயல்திறன் இந்த சவால்களை எவ்வளவு சிறப்பாக எதிர்கொள்கிறது மற்றும் அதன் உத்திகளை செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. என்.யு.சி.எஃப். டி.சி-இன் வெற்றி கூட்டுறவு வங்கித் துறையின் பங்குதாரர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுடன், மற்ற துறைகளிலும் இதே போன்ற முயற்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படும்.

நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளில் கூட்டுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கூட்டுறவுத் துறை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், நிதி உள்ளடக்கம் மற்றும் ஊரக வளர்ச்சியில் அவற்றின் பங்கை மேம்படுத்தவும் இந்த முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை பின்பற்றுவது உட்பட, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042677

 

BR/KR

 

***

 


(Release ID: 2042979) Visitor Counter : 44


Read this release in: English , Urdu , Hindi