புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தை மேம்படுத்துதல்

Posted On: 07 AUG 2024 1:59PM by PIB Chennai

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தால் சேகரிக்கப்படும் புள்ளி விவரங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அறிவியல் பூர்வமான மாதிரி வடிவமைப்புகளை ஏற்றுக்கொள்வது, களப்பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான கருத்துரு மற்றும் வரையறைக்காக கட்டமைப்பு அறிவுரைகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். கணினி உதவியுடன் தனிப்பட்ட நேர்காணல் மூலம் கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தி தரவு சேகரிக்கப்படுகிறது. பல்வேறு களங்களில் தரவு நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்கு சேகரிக்கப்பட்ட தரவு ஒரே நேரத்தில் பல நிலைகளில் சரிபார்க்கப்படுகிறது. இது விரைவான சரிபார்ப்பு மற்றும் மேம்பட்ட தரவு தரம் ஆகியவற்றுடன் ஆய்வு முடிவை வெளியிடுவதில் உள்ள கால சுழற்சியையும் செயல்படுத்துகிறது. இந்த தொழில்நுட்ப மேம்பாடு கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடுவதற்கான கால  தாமதத்தை கணிசமாகக் குறைத்தது. மேலும், முதன்மை களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்புடன் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் முழுமையான பயிற்சி அளிப்பதை உறுதி செய்வதற்காக பல அடுக்கு பயிற்சி முறை பின்பற்றப்படுகிறது. புள்ளி விவரங்களின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு மேற்பார்வை அலுவலர்களால் முறையான களப்பணி மற்றும் புள்ளி விவரங்களை கூர்ந்தாய்வு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

BR/KR

***

 


(Release ID: 2042950) Visitor Counter : 41


Read this release in: English , Urdu , Hindi