மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வள விரிவாக்கம்
Posted On:
07 AUG 2024 4:28PM by PIB Chennai
கடந்த நான்கு நிதியாண்டுகளில் (நிதியாண்டு 2020-21 முதல் 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டில் (2024-25) பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற செயலாக்க முகமைகளின் ரூ.19670.56 கோடி மதிப்பிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.8666.28 கோடியாகும். மேற்கூறிய காலகட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட பரந்த நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும் 29,964 ஹெக்டேர் உள்நாட்டு நீர்வாழ் உயிரின வளர்ப்பு, 4013 பயோஃப்ளோக் அலகுகள், 11995 மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அமைப்புகள் (ஆர்ஏஎஸ்), 50,710 நீர்த்தேக்க கூண்டுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 543.7 ஹெக்டேர் கூண்டுகள், 1,11,110 அலகுகள் கடற்பாசி தெப்பங்கள் மற்றும் மோனோலைன் அலகுகள், 1489 மெல்லுடலி வளர்ப்பு அலகுகள், 720 செயற்கை மீன் உறைவிடங்கள், 6 ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்கள், கடற்பாசி பூங்கா உட்பட, 1040 தீவன ஆலைகள், 54 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள், 586 குளிர்பதன கிடங்குகள், 18 மொத்த மீன் சந்தைகள், 193 சில்லறை மீன் விற்பனை சந்தைகள், 6581 மீன் விற்பனை அங்காடிகள் மற்றும் 108 மதிப்பு கூட்டப்பட்ட தொழில் அலகுகள் மற்றும் 26,188 உற்பத்திக்குப் பிந்தைய போக்குவரத்து அலகுகள்.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத்திட்டம் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பொதுப் பிரிவு பயனாளிகளுக்கான அலகுத் தொகையில் 40 சதவீதத்திற்கு பதிலாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெண் பயனாளிகளுக்கு அதிக அளவிலான அலகுத் தொகையில் 60% வரை நிதி உதவியை வழங்குகிறது. வண்ண மீன்வளர்ப்பு, கடற்பாசி வளர்த்தல், மெல்லுடலி வளர்ப்பு உட்பட மகளிருக்கு வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5374.03 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் 499 மெல்லுடலி வளர்ப்பு, 20,655 கடற்பாசி வளர்ப்பு தெப்பங்கள், 631 அலங்கார அலகுகள் ஆகியவை அடங்கும். இதன் மூலம் 9392 மகளிர் நேரடியாக பயனடைகின்றனர். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மெல்லுடலிகள் வளர்ப்புக்காக தமிழ்நாட்டில் ஒரு பிரிவு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு பூஜ்யம் புள்ளி 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக பூஜ்யம் புள்ளி பூஜ்யம் 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடற்பாசி வளர்ப்பு, குட்டை மீன் வளர்ப்பு போன்றவற்றுக்காக தமிழ்நாட்டில் 10,955 தொழில்களைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு 330.73 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பாக 119.062 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று அலங்கார மீன்வளர்ப்புக்காக தமிழ்நாட்டில் ஒரு பிரிவு தொடங்கப்பட்டு இதற்கான 25 லட்சம் ரூபாயில் மத்திய அரசின் பங்களிப்பாக 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
MM/KPG/DL
(Release ID: 2042882)
Visitor Counter : 38