சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூல்

Posted On: 07 AUG 2024 1:02PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பயனர் கட்டண விகிதங்கள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

2023-24 நிதியாண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூலிப்பு இடங்களில் மொத்தக் கட்டண வசூல் ரூ. 54,811.13 கோடியாகும். 2023-24 நிதியாண்டு முதல் பயனர் கட்டண விகிதங்களில் சராசரி அதிகரிப்பு 2.55% ஆக  இருக்கும். இதனால் முந்தைய வசூல் தொகையில் சுமார் 1400 கோடி ரூபாய் அதிகரிக்கலாம்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042494

***

SMB/RS/DL


(Release ID: 2042819) Visitor Counter : 61