மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மொத்தமுள்ள 42.48 இலட்சம் பால் உற்பத்தியாளர்களில் சுமார் 12.52 இலட்சம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள், பால்பதப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்
Posted On:
07 AUG 2024 3:41PM by PIB Chennai
பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டம் ஜனவரி 21, 2017 முதல் ஜனவரி 30, 2024 வரை நடைமுறையில் இருந்தது. இது ஒரு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமாகும். இது பால் பதப்படுத்துதல் மற்றும் குளிரூட்டும் ஆலைகளை நவீனப்படுத்துவதையும், மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு பயனளிப்பதும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையை வழங்குவதும், திட்டப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 2024 ஜூன் நிலவரப்படி, மொத்தம் 42.48 லட்சம் உற்பத்தியாளர் உறுப்பினர்களில் சுமார் 12.52 லட்சம் பெண் பால் உற்பத்தியாளர்கள் பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதாவது மொத்த உறுப்பினர்களில் 30 சதவீதம் பேர் பெண் பால் உற்பத்தியாளர்கள் ஆவர்.
இத்திட்டம் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுடன் இணைக்கப்பட்டு, அதன் செயல்படுத்தல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு (2024-2026) ரூ. 29,110.25 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒரு தனிப்பட்ட தொழில்முனைவோராக 6 பெண்களுக்கு உதவி வழங்கியது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
IR/KV/DL
(Release ID: 2042712)
Visitor Counter : 42