பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

7.97 லட்சத்துக்கும் மேற்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன

Posted On: 07 AUG 2024 3:01PM by PIB Chennai

15.07.2024  நிலவரப்படி, மொத்தம் 1,09,55,968 தனித்துவ மாற்றுத் திறனாளி அடையாள  அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7,97,698 அட்டைகள் பழங்குடியின பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. பழங்குடியின பிரிவினருக்காக உருவாக்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக 1,17,541 அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளை அந்தந்த மாநில அரசுகள் / யூனியன் பிரதேச அரசுகளால் அறிவிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரிகள் மூலம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சலுகைகளை வழங்கும் அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் யுகே இதனைத் தெரிவித்தார்.

*****

IR/KV/KR/DL



(Release ID: 2042710) Visitor Counter : 40