பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-24 ம் ஆண்டில் நாட்டில் உள்ள 405 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்

Posted On: 07 AUG 2024 3:01PM by PIB Chennai

நாடு முழுவதும் தற்போது, மொத்தம் 708 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 405 பள்ளிகள் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி திட்டத்தை நிர்வகிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் அமைச்சகத்தின் கீழ் 2019 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னாட்சி சங்கமான பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்திற்கு அமைச்சகம் நிதி விடுவிக்கிறது, மேலும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / கட்டுமான முகமைகள் / மாநில சங்கங்களுக்கு இப்பள்ளி கட்டுமானத்திற்கான தேவைகள் மற்றும் பள்ளிகளை நடத்துவதற்கான தொடர்ச்சியான செலவுகளுக்கு ஏற்ப நிதியை விடுவிக்கிறது.

 

தமிழ்நாட்டில் 8 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவை அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2019-20 ம் ஆண்டில் 73,391 மாணவர்களும், 2020-21 ம் ஆண்டில் 90,520 மாணவர்களும், 2021-22 ம் ஆண்டில் 1,05,463 மாணவர்களும், 2022-23 ம் ஆண்டில் 1,13,275 மாணவர்களும், 2023-24 ம்  ஆண்டில் 1,23,841 மாணவர்களும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் சேர்ந்தனர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு. துர்காதாஸ் யுகே இதனைத் தெரிவித்தார்.

*****

 

 

IR/KV/KR/DL



(Release ID: 2042709) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP