உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு ரூ.28,400 கோடி ஒதுக்கீடு
Posted On:
06 AUG 2024 4:30PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தொழில்துறை மேம்பாட்டிற்கு புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ரூ. 28,400 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் புதிய மத்திய துறை திட்டம் 2021-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய மத்திய துறைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை விவரங்கள் வருமாறு:
- மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை
- மூலதன வட்டி மானியம்
- சரக்கு மற்றும் சேவைகள் வரி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை
- செயல் மூலதன வட்டி மானியம்
தொழில் துறையை ஊக்குவிப்பதற்கும், முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாக மாற்றுவதற்கும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முன்முயற்சிகள்:
- புதிய மத்திய துறைத் திட்டம், 2021
- ஜம்மு காஷ்மீர் தொழில்துறை கொள்கை, 2021-30
- ஜம்மு காஷ்மீர் தொழில்துறை நில ஒதுக்கீடு கொள்கை, 2021-30
- ஜம்மு காஷ்மீர் தனியார் தொழிற்பேட்டை மேம்பாட்டுக் கொள்கை, 2021-30
- ஜம்மு காஷ்மீரில் தொழில்துறையில் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை, 2022
- ஜம்மு காஷ்மீர் ஒற்றை சாளர விதிகள், 2021
- விற்றுமுதல் ஊக்கத்தொகை திட்டம், 2021
- ஜம்மு காஷ்மீர் கம்பளி பதப்படுத்துதல், கைத்தறி மற்றும் கைவினைக் கொள்கை 2020
- கூட்டுறவு / சுய உதவிக் குழுக்களுக்கான நிதி ஆதரவு திட்டம், 2020
- கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான கடன் அட்டை திட்டம், 2020
- ஜம்மு காஷ்மீரில் கைவினைத் துறையை மேம்படுத்துவதற்கான கர்கந்தர் திட்டம், 2021
- ஏற்றுமதி மானியத் திட்டம், 2021
- கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறித் துறையின் கைவினைஞர்கள் / நெசவாளர்களுக்கான திருத்தப்பட்ட கல்வித் திட்டம் 2022
- ஜம்மு காஷ்மீர் ஸ்டார்ட் அப் கொள்கை 2024-27
இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
*****
(Release ID: 2042127)
SMB/RS/KR
(Release ID: 2042564)
Visitor Counter : 40