மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய Blue Revolution

Posted On: 06 AUG 2024 5:16PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்குட்பட்ட, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, நிலையான மற்றும் பொறுப்பான முறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மானியத் தொகை, மீன் உற்பத்தியை அதிகரிக்க நீர்வாழ் உயிரின வளர்ப்போருக்கு வழங்கப்படும் திட்ட கூறுகள் மற்றும் குட்டை மீன் வளர்ப்பை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மீன்வளத் துறையால் ரூ. 20050 கோடி முதலீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்காக குளங்கள் மற்றும் குட்டைகள் கட்டுதல், இடுபொருள் உதவி அளித்தல், குஞ்சு பொரிப்பகங்கள் கட்டுதல், தொழில்நுட்ப புகுத்துதல் மற்றும் மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறையை நிறுவுதல் போன்ற பல்வேறு மீன்வள மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு அலகுத் தொகையில் 40% வரையும், ஆதிதிராவிடர்,  பழங்குடியினர்,  பெண் பயனாளிகளுக்கு அலகுத் தொகையில் 60% வரையும் நிதியுதவி வழங்கப்படுகிறது. உயிரி மிதவை மீன் வளர்ப்பு, நீர்த்தேக்கங்களில் கூண்டுகள் அமைத்தல், திறந்த நீர்நிலைகளில் பேனா வடிவிலான  கூண்டுகளில் மீன் வளர்த்தல், பாரம்பரிய மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வண்ண மீன் வலைகள் வழங்குதல், கடற்பாசி, வளர்ப்பு அலகுகள் உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தையப் குளிர்பதன வசதிகளான, குளிர்பதன கிடங்குகள், பனிக்கட்டி நிலையங்கள் அமைத்தல், குளிரூட்டப்பட்ட மற்றும் குளிர்காப்பு வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மீன் போக்குவரத்திற்காக பனிக்கட்டி பெட்டிகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள் வழங்குதல். உயிருள்ள மீன் விற்பனை நிலையங்கள், மீன் தீவன ஆலைகள் நிறுவுதல், மீன் சில்லறை விற்பனை சந்தைகள் மற்றும் மீன் அங்காடிகள் கட்டுதல், மீன் மதிப்பு கூட்டப்பட்ட தொழில் அலகுகள் கட்டுதல், மீன் மற்றும் மீன் பொருட்களின் மின்னணு வர்த்தகம் மற்றும் மின்னணு சந்தைப்படுத்துதலை ஊக்குவித்தல், பாரம்பரிய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி கலன்களை வாங்குவதற்கு உதவி செய்தல், தற்போதுள்ள மீன்பிடி கலன்களை மேம்படுத்துதல், மீனவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், மீன்பிடி தடைக்காலம்,  மீன்வளம் குறையும் காலங்களில் வாழ்வாதார உதவிகள், காப்பீடு, பயிற்சி மற்றும் விரிவாக்கம். குஞ்சு பொரிப்பகங்கள், ஆர்.ஏ.எஸ், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட குளிர்ந்த நீர் விகாரங்கள்  இனங்களின் ஜெர்ம்பிளாசத்தை இறக்குமதி செய்வதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் குளிர்ந்த நீர் மீன்வளத்தை குறிப்பாக குட்டை மீன் வளர்ப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உதவுகிறது. மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் கடந்த நான்கு ஆண்டுகளில் (2020-21 முதல் 2023-24 வரை) குட்டை மீன் வளர்ப்பை மேம்படுத்தவும், 46 குட்டை மீன் குஞ்சு பொரிப்பகங்கள், 5038 ஓடுபாதைகள், குளிர்நீர் மீன்பிடிப்புக்கான 58 ஆர்ஏஎஸ் மற்றும் 804 யூனிட் ஜெர்ம்பிளாசம் இறக்குமதி உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளுக்காக ரூ.193.53 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ரூ.7522.48 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குட்டை மீன்வளர்ப்பு உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு அந்நிய முதலீட்டு நிதிச் சலுகை நிதியை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், அசல் தொகையை திருப்பிச் செலுத்தும் 2 ஆண்டுகள் தடை உட்பட 12 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு ஆண்டுக்கு 3% வரை மத்திய அரசு வட்டி மானியம் வழங்குகிறது.

மீன்வளத் துறையை நெகிழ்திறன் மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக, பிப்ரவரி 2024-ல், ரூ.6000 கோடி முதலீட்டில் பிரதமரின் மீன் வள மேபாட்டுத் திட்டத்தின், துணை திட்டமான பிரதமரின் மீன்வள விவசாயம் மறுமலர்ச்சித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் குறிக்கோள்கள் மீன்வளத்தை முறைப்படுத்துதல், நீர்வாழ் உயிரின வளர்ப்பு காப்பீடு, மீன்வள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் மதிப்புத் தொடர் திறன், பாதுகாப்பான மீன் உற்பத்திக்கான பாதுகாப்பு மற்றும் தரமான முறைகளை பின்பற்றுதல் போன்றவற்றை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

குட்டை மீன்வளர்ப்பு உள்ளிட்ட மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கான நடைமுறை மூலதனத் தேவையை பூர்த்தி செய்ய, மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கிசான் கடன் அட்டை வசதியை மத்திய அரசு 2018-19 ஆம் நிதியாண்டு முதல் நீட்டித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2042167)

MM/KPG/KR



(Release ID: 2042550) Visitor Counter : 69


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP