மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமங்களில் பால் சார்ந்த தொழில்களை விரிவுபடுத்துதல்

प्रविष्टि तिथि: 06 AUG 2024 5:16PM by PIB Chennai

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, பால்வளம் சார்ந்த தொழிலில் மாநில அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக கீழ்க்கண்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

  1. தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம்
  2. பால்பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு உதவுதல்.
  3. கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF)

இந்தத் திட்டங்களின் (பகுதி (அ)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவை) பயனாளிகள் பால்கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் (SHGs), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொழில்முனைவோர், அந்தந்த திட்டங்களின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ், மாநில வாரியான மற்றும் திட்ட வாரியான பயனாளிகளின் எண்ணிக்கை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டில்  தேசிய பால்வள மேம்பாட்டுத்  திட்டத்தின் தொகுப்பு அ-வில் 9 பேரும், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் 9 பேரும், பால் பொருட்கள் பதப்படுத்தும் கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் 4 பேரும்,  பால்பண்ணை சார்ந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ் 4 பேரும்  பயனடைந்துள்ளனர்.

பால் உற்பத்தியை அதிகரித்தல், மாட்டினங்களின் உற்பத்தித்திறன், பால்பண்ணை உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தீவனம் கிடைப்பதை அதிகரித்தல் போன்ற வகையில் பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 9 கோடிக்கும் மேற்பட்ட பால் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்கின்றன. இத்திட்டங்கள் பால் உற்பத்திக்கான செலவைக் குறைக்கவும், பால் விலையை நிலைப்படுத்தவும், பால் பண்ணையின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

 

*****

(Release ID: 2042168)

MM/KPG/KR


(रिलीज़ आईडी: 2042503) आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri