மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை காப்பீடு
Posted On:
06 AUG 2024 5:18PM by PIB Chennai
ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் இனப்பெருக்கப் பண்ணைகளை அமைப்பதற்கு தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பிரிவு 8 நிறுவனங்களுக்கு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி 50 விழுக்காடு முதலீட்டு மானியமாக ரூ.50.00 லட்சம் வரை வழங்க அரசு முன்மொழிந்துள்ளது.
கால்நடை காப்பீடு செயல்பாட்டின் கீழ் தேசிய கால்நடை இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
i) அனைத்து பிரிவுகள் மற்றும் பகுதிகளுக்கான பிரீமியத்தின் பயனாளிகளின் பங்கு 20 - 50% க்கு பதிலாக 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ii) மீதமுள்ள காப்பீட்டுக் கட்டணத் தொகையை 60:40 (இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக), 90:10 (இமயமலை / வடகிழக்கு மாநிலங்களுக்கு) மற்றும் 100% (யூனியன் பிரதேசங்களுக்கு) அரசின் நிதி பங்கீட்டின்படி மத்திய அரசு பகிர்ந்து கொள்ளும்.
iii) காப்பீடு பெற தகுதியான கால்நடைகளின் எண்ணிக்கை பன்றி மற்றும் முயல் தவிர அனைத்து கால்நடைகளுக்கும் ஒரு வீட்டிற்கு 5 கால்நடை அலகுகளிலிருந்து 10 கால்நடை அலகுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. (1 கால்நடைகளுக்கும் அலகு = செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, முயல் போன்ற 10 சிறிய விலங்குகள்).
iv) காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள கால்நடைகளை அடையாளம் காணும் முறையுடன் கூடுதலாக கதிரியக்க அதிர்வெண் அடையாளக் கருவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
BR/KR
***
(Release ID: 2042479)
Visitor Counter : 39