வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சட்ட மையத்தின் ஏழாம் ஆண்டு விழா கொண்டாட்டம்
Posted On:
06 AUG 2024 3:23PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக மையத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டத்திற்கான மையம் (CTIL) அதன் ஏழாவது ஆண்டு நிகழ்வை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் சுங்க இதழின் சிறப்பு இதழ் மற்றும் "இந்தியாவின் ஜி 20 தலைமை" குறித்த ஏழாம் ஆண்டு இதழ் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் ஜி20 தலைவர் திரு ஸ்ரீ அமிதாப் கந்த் கலந்து கொண்டார். வர்த்தகத்துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால், வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு எல்.சத்யா ஸ்ரீநிவாஸ், இந்திய வெளிநாட்டு வர்த்தகக் கல்வி மையத்துணைத் தலைவர் திரு ராகேஷ் மோகன் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் ஜி20 தலைவர் திரு அமிதாப் காந்த் தனது முக்கிய உரையில், சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, பருவநிலை மாற்றத் தணிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண பெரிய பொருளாதாரங்களுக்கான முதன்மை அமைப்பாக ஜி20-ன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உலகளாவிய தெற்கு மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், பல்வேறு உலகளாவிய பொருளாதார மன்றங்கள், நிறுவன வங்கிகள் இந்த நாடுகளின் கவலைகளையும் பருவநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த அவர்களின் கருத்துக்களையும் நிவர்த்தி செய்ய தவறிவிட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஜி20 தலைவர் என்ற முறையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தைச் சேர்ப்பதன் மூலம் இந்திய ஜி20 தலைமைத்துவம் எவ்வாறு சர்வதேச பொருளாதாரம், நிலையான வளர்ச்சி மற்றும் நிதி வளர்ச்சி ஆகியவற்றின் திசையை உள்ளடக்கிய முறையில் வடிவமைக்கும் என்பது குறித்த தனது நுண்ணறிவுகளை அவர் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042086
***
IR/RS/KR
(Release ID: 2042157)
Visitor Counter : 53