சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

732 மாவட்டங்களில் மனிதர்கள் கழிவுகளை அகற்றும் நிலை ஒழிப்பு

Posted On: 06 AUG 2024 12:37PM by PIB Chennai

'கையால் கழிவுகளை அகற்றுபவர்களை பணியமர்த்தல் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம், 2013-ன் பிரிவுகள் 2 (d) மற்றும் 2 (g)-ன் படி, அபாயகரமான சுத்தம் மற்றும் கையால் கழிவுகளை அகற்றுபவர்களின் வரையறை பின்வருமாறு:

அபாயகரமான சுத்தம்" என்பது ஒரு பணியாளரால், ஒரு கழிவுநீர் அல்லது செப்டிக் டேங்க் தொடர்பாக, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் பிற துப்புரவு சாதனங்களை வழங்குவதற்கான தனது கடமைகளை முதலாளி நிறைவேற்றாமல், பணியாளரால் கையால் சுத்தம் செய்வதைக் குறிப்பதோடு வேறு எந்த ஒரு சட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்ட அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள விதிமுறையின் கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறது.

'மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்' என்பது, ஒரு சுகாதாரமற்ற கழிப்பறையில் அல்லது சுகாதாரமற்ற கழிப்பறைகளிலிருந்து மனிதக் கழிவுகள் அகற்றப்படும் திறந்த வடிகால் அல்லது குழியில் மனித மலத்தை கைமுறையாக சுத்தம் செய்தல், எடுத்துச் செல்லுதல், அகற்றுதல் அல்லது வேறு எந்த வகையிலும் கையாளுதல் ஆகியவற்றிற்காக, ஒரு தனிநபர் அல்லது உள்ளூர் அதிகாரசபை அல்லது ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தால் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட ஒரு நபர், அல்லது ரயில் பாதையில், மத்திய அரசு அல்லது மாநில அரசால் அறிவிக்கப்படும் பிற இடங்கள் அல்லது வளாகத்தில், கழிவுகள் முழுமையாக மக்கிப்போவதற்கு முன்பு, பரிந்துரைக்கப்படும் முறையில் "கையால் கழிவுகளை அகற்றுதல்" என்ற சொற்றொடர் அதற்கேற்ப பொருள்கொள்ளப்பட வேண்டும்.

31.07.2024-ம் ஆண்டில், நாட்டில் உள்ள 766 மாவட்டங்களில், 732 மாவட்டங்கள் தங்களை கையால் மலம் அள்ளும் பணி இல்லாதவையாக அறிவித்துள்ளன.

மேலும், தூய்மை இயக்கத்தின் (நகர்ப்புறம் 2.0) கீழ் சிறிய நகரங்களுக்கு இயந்திரங்களை வாங்கவும், இயந்திரமயமாக்கல் நிலையை மேம்படுத்தவும் மாநிலங்களுக்கு வழங்க ரூ.371 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5000+ நிலையான செப்டிக் டேங்க் வாகனங்கள், 1100+ ஹைட்ரோவாக் மற்றும் 1000+ தூர்வாரும் இயந்திரங்கள் இருப்பதாக மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கழிவுநீர் தொட்டிகளுக்கான பிஐஎஸ் 2470 தர நிர்ணயங்களை தங்கள் துணை விதிகளில் இணைத்துக் கொண்டு கட்டட அனுமதி வழங்கும்போது அவற்றை அமல்படுத்த வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், அவசர கழிவுகளை அகற்ற உதவி தொலைபேசி வசதிகள் வழங்குதல் மற்றும் தகவல், கல்வி தொடர்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2042007)

MM/AG/KR

 


(Release ID: 2042104) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP