பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையின் வழிகாட்டியாக உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்
Posted On:
04 AUG 2024 6:25PM by PIB Chennai
"370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையின் ஒளிவிளக்காக உருவெடுக்கும்" என்று 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் 5-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தூர்தர்ஷன் செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக, ஜம்மு & காஷ்மீருக்குள் ஆராயப்படாத இயற்கை வளங்கள் மற்றும் செயலற்ற மனித வளங்கள் வெளிவந்துள்ளதாகவும், இதற்கு சமீபத்திய உதாரணம் பதேர்வாவிலிருந்து தோன்றிய "ஊதா புரட்சி" என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். "370 வது பிரிவின் ரத்து, கடந்த ஏழு தசாப்தங்களாக ஜம்மு & காஷ்மீரில் குடியுரிமையை இழந்த ஏராளமான மக்களுக்கு குடியுரிமையைக் கொண்டு வந்தது" என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) தெரிவித்தார்.
முந்தைய அரசுகள் 370 -ல் உண்மையில் 370-வது பிரிவை துஷ்பிரயோகம் செய்து சாதாரண மக்களைத் தங்கள் சொந்த நலன்களுக்காக சுரண்டியதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் விமர்சித்தார்.நெருக்கடி நிலையின் போது அனைத்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக எவ்வாறு அதிகரிக்கப்பட்டது என்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். தேசியக் கொடியை ஏற்றுவது ஒரு காலத்தில் பலரின் கனவாக இருந்தது என்றும், இப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் மூவர்ணக் கொடி ஏற்றப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041305
*****
RB/DL
(Release ID: 2041920)
Visitor Counter : 48