தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ-ஷ்ரம் தளம்

Posted On: 05 AUG 2024 4:16PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இ-ஷ்ரம் தளத்தை 2021 ஆகஸ்ட் 26-ல் அறிமுகப்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை  உருவாக்குவதற்காக சரிபார்க்கப்பட்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு யுனிவர்சல் கணக்கு எண் மற்றும் இ-ஷ்ரம் கார்டுகளை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும்.

31.07.2024 நிலவரப்படி, 29.85 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்தத் தளத்தில் முக்கிய நோக்கங்களில் ஒன்று, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக நலத் திட்டங்களை வழங்குவதை எளிதாக்குவதாகும். அமைப்புசாரா தொழிலாளர்களை முறைப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய தொழில் சேவை மற்றும் திறன் இந்தியா டிஜிட்டல் ஹப் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொருத்தமான  சிறந்த  வேலை வாய்ப்புகளை  வழங்குவதே இதன் நோக்கமாகும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதே இந்த  ஒருங்கிணைப்பாகும். மேலும், 2024-25 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான பிரதமரின் 5 திட்டங்கள் அடங்கிய தொகுப்பை அரசு அறிவித்தது.1 கோடி இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் வாய்ப்புகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.

இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜே மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்.

----

PKV/KPG/DL



(Release ID: 2041879) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP