எரிசக்தி அமைச்சகம்
வீட்டு வயரிங் மீதான பாதுகாப்பு தணிக்கைகள்
Posted On:
05 AUG 2024 3:47PM by PIB Chennai
மின்சாரச் சட்டம், 2003-ன் (பாதுகாப்பு மற்றும் மின்சார வழங்கல் தொடர்பான நடவடிக்கைகள்) பற்றிய விதிமுறைகள், 2023 ஐ வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு இணங்க, விளக்குகள், மின்விசிறிகள், உருகிகள், சுவிட்சுகள், 250 V க்கு மிகாத மின்னழுத்தத்தின் வீட்டு உபகரணங்கள் மற்றும் அதன் திறன் அல்லது தன்மையை எந்த வகையிலும் மாற்றாத பொருத்துதல்கள் தவிர, தற்போதுள்ள நிறுவல்களில் சேர்த்தல், மாற்றங்கள், பழுதுபார்ப்பு மற்றும் சரிசெய்தல் உள்ளிட்ட எந்தவொரு மின் நிறுவல் பணியும் மேற்கொள்ளக் கூடாது. மாநில அரசால் உரிமம் அளிக்கப்பட்ட மின் ஒப்பந்தக்காரர் மற்றும் அதன் சார்பாக தகுதிச் சான்றிதழ் வைத்திருக்கும் ஒரு நபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இதனைச் செய்யலாம்.
இந்த விதிமுறைகளின் கீழ், அறிவிக்கப்பட்ட மின்னழுத்தத்திற்குக் கீழே அல்லது அதற்கு சமமான மின் நிறுவல்கள் உரிமையாளர் அல்லது நுகர்வோரால் சுய சான்றளிக்கப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், உரிமையாளர் அல்லது சப்ளையர் அல்லது நுகர்வோர், தனது நிறுவலை சம்பந்தப்பட்ட அரசின் மின் ஆய்வாளரால் ஆய்வு செய்து சோதிக்க விருப்பம் உள்ளது.அறிவிக்கப்பட்ட மின்னழுத்தத்திற்கு சமமான அல்லது அதற்குக் குறைவான மின்னழுத்த நிலை ஏற்பட்டால், பட்டய மின் பாதுகாப்பு பொறியாளர் உரிமையாளரின் வேண்டுகோளின் பேரில் நிறுவலை சோதிக்க முடியும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மின்சார ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் 2018 ஜூன் 21 அன்று வழங்கியுள்ளது.அந்தந்த மாநில அரசு அல்லது மத்திய அரசு, அந்தந்த அதிகார வரம்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மின்னழுத்தத்தை அறிவிக்கலாம்.இதற்காக மத்திய அரசு 11 கிலோ வோல்ட் மின்சாரம் அறிவிக்கை செய்துள்ளது.
மின் கம்பியின் ஆயுட்காலம் கம்பியின் தரம் மற்றும் மின் வேலை, சுவிட்சுகள், சாக்கெட், குழாய் போன்ற பிற உபகரணங்களின் தரம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.
இந்தத் தகவலை மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
----
PKV/KPG/DL
(Release ID: 2041868)
Visitor Counter : 56