இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளையாட்டு தொடர்பான கல்வியில் மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி

Posted On: 05 AUG 2024 4:31PM by PIB Chennai

'விளையாட்டு' மாநிலம் சார்ந்ததாக இருப்பதால், நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு தொடர்பான கல்வியை மேம்படுத்தும் முதன்மை பொறுப்பு அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. இந்த முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக  உள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம், இந்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது. இந்த நிறுவனங்களில் பின்வருவன அடங்கும்:

தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் இம்பால், மணிப்பூர்

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள லட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்வி நிறுவனம், அசாம், குவஹாத்தியில் உள்ள அதன் வளாகம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள லட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்விக் கல்லூரி

பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு நிறுவனம்

இந்த நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு, உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி திட்டங்களில் சான்றிதழ்கள், பட்டயங்கள், இளநிலை, முதுநிலை, பிஎச்டி உள்ளிட்ட பல படிப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் விளையாட்டுக் கல்வியின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அமைச்சகம் இந்தப் படிப்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

***

SMB/AG/DL


(Release ID: 2041865) Visitor Counter : 43