திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் கைவினைஞர் பயிற்சித் திட்டம்
Posted On:
05 AUG 2024 1:05PM by PIB Chennai
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் நீண்டகால பயிற்சி வழங்குவதற்காக கைவினைஞர் பயிற்சித் திட்டத்தை தொழிற்பயிற்சி நிலையங்களின் கட்டமைப்பு மூலம் செயல்படுத்துகிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடி சமூகம் உட்பட அனைத்து தரப்பு இளைஞர்களுக்கும் குறுகிய கால 'திறன் மேம்பாடு' பயிற்சி அளிப்பதற்காக மக்கள் கல்வி நிறுவனத் திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், தற்போது, நாட்டில் 15,034 தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அவற்றில் 1,628 தொழிற்பயிற்சி நிலையங்கள் (520 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 1108 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்) பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 1042 தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 123 தொழிற் பயிற்சி நிலையங்கள் (62 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், 61 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள்) மஹாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.
தொழிற்பயிற்சி நிலையங்கள் மாநில அரசின் நிர்வாகம் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டில் உள்ளன.இருப்பினும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அவ்வப்போது மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் உட்பட நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவ உதவுவதற்காக நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் என்பது அமைச்சகத்தின் கீழ் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் உள்ள 15-45 வயதுக்குட்பட்ட 12-ம் வகுப்பு வரை கல்வியறிவு பெறாதவர்கள், அடிப்படை கல்வி பெற்றவர்கள் மற்றும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆகியோருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற குறைந்த வருவாய் பகுதிகளில் பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் முன்னுரிமை குழுக்களாக உள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041503
*****
PKV/KPG/KR/DL
(Release ID: 2041851)
Visitor Counter : 52