திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தமிழ்நாட்டில் 503 தொழி்ற்பயிற்சி நிலையங்கள் உள்ளன
Posted On:
05 AUG 2024 1:07PM by PIB Chennai
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி இயக்குநரகம் நாடு முழுவதும் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மூலம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்துகிறது.
தற்போது நாட்டில் 15,034 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3298 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 11,736 தொழிற்பயிற்சி நிலையங்கள் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் அடங்கும்.
தற்போது தமிழ்நாட்டில் 503 தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 92 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும், 411 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் அடங்கும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.இதற்காக, தொழிற்பயிற்சி நிலையங்களில் காலமுறைப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரத்திற்கான தரம் மற்றும் விதிமுறைகள் காலமுறைப்படி மறு ஆய்வு செய்யப்பட்டு, படிப்பு மற்றும் பாடத்திட்டங்கள் தொழில் தரத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு, மதிப்பீட்டு நடைமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்கள் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசாங்கத்தின் நிதி மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், மத்திய அரசு, அவ்வப்போது அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்களை நடத்துகிறது.
சமீப காலம் வரை, DGT "தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்துதல் (STRIVE)", "தற்போதுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மாதிரி தொழிற்பயிற்சி நிலையங்களாக (மாதிரி ITI)", "வடகிழக்கு மாநிலங்களில் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் (ESDI)", மற்றும் "இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 48 மாவட்டங்களில் திறன் மேம்பாடு" போன்ற திட்டங்களை செயல்படுத்தி வந்தது. நாட்டில் உள்ள ஐ.டி.ஐ.
தொழிற்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறனை வலுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், 500 தொழிற்பயிற்சி நிலையங்கள் (467 அரசு மற்றும் 33 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட) தொழிற்பயிற்சி நிலையங்களின் பணிமனைகள், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டன. இந்தத் திட்டம் 2024, மே 31 அன்று முடிவடைந்தது, மேலும் மொத்தம் ரூ.581.56 கோடி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு பணிமனைகள், ஆய்வகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காக விடுவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
IR/KV/KR
(Release ID: 2041505)
(Release ID: 2041701)
Visitor Counter : 75