சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2024 12:15PM by PIB Chennai
நாட்டில் 2012-13 ஆம் ஆண்டுவரை அடையாளம் காணப்பட்ட ஈரநிலங்கள் (ஏரிகள் உட்பட) மற்றும் நகர்ப்புற/நகர்ப்புறத்திற்கு வெளியே உள்ள ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய ஈரநிலங்கள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நிதி உதவி வழங்கியது.
அதன்படி, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த, தேசிய ஈரநிலங்கள் பாதுகாப்புத் திட்டம், தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தை இணைத்து நாட்டில் ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை க்கான தேசிய கடல்வாழ் உயிரின சூழல் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளுக்கு இடையே செலவு பகிர்வு அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
*****
(Release ID: 2041458)
IR/KV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2041694)
வருகையாளர் எண்ணிக்கை : 105