சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வன நிலங்களை குத்தகைக்கு விடுதல்

Posted On: 05 AUG 2024 12:17PM by PIB Chennai

டேராடூனில் உள்ள இந்திய வனப்பரப்பு கணக்கெடுப்பு அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் வனப்பகுதியை மதிப்பீடு செய்து இந்திய வனப்பரப்பு அறிக்கையில் வெளியிடுகிறது. 2021 அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வனப்பகுதி 7,75,288 சதுர கிலோமீட்டர் ஆகும்.

'நிலம்' என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. வனப்பகுதிகள் மற்றும் அதன் சட்ட எல்லைகள் சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.அதன்படி, வன நிலத்தை குத்தகைக்கு அல்லது ஒதுக்குவதற்கான இறுதி முடிவு சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தின் எல்லைக்குள் உள்ளது.இருப்பினும், வனமற்ற நோக்கங்களுக்காக எந்தவொரு வன நிலத்தையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசின் முன் அனுமதி தேவைப்படுகிறது.

மேலும், வனங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்தின் பொறுப்பாகும், இது இந்திய வனச் சட்டம், 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட பிற மாநில குறிப்பிட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்படாத / சட்டவிரோதமாக வன நிலங்களை வைத்திருப்பதை அகற்ற தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறது.

தமிழ்நாட்டில் 1,30,060  சதுர கிலோ மீட்டர் அளவிற்கு நிலப்பரப்பு உள்ள நிலையில், 23,188 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு வனப்பரப்பு உள்ளது.

 

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2041459)

IR/KV/KR


(Release ID: 2041683) Visitor Counter : 41