சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் சூழல் தளத்தை இணைத்தல்
Posted On:
05 AUG 2024 12:19PM by PIB Chennai
சூழல் தளம், சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவு தொடர்பான எந்தவொரு தகவலுக்கும் அணுகலைக் கட்டுப்படுத்தாது.திட்ட முன்மொழிபவர் சமர்ப்பித்த விவரங்கள், நிபுணர் மதிப்பீட்டுக் குழு, ஆலோசனைக் குழு, பிராந்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு, வனவிலங்குகளுக்கான தேசியமாநில வாரியம், கடலோர ஒழுங்குமுறை மண்டலங்கள், அனுமதி கடிதங்கள் போன்றவற்றின் நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் போன்ற தகவல்கள் சூழல் தளத்தில் பொதுக் களத்தில் கிடைக்கின்றன. சூழல் தளம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட தற்போதுள்ள சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் விதிகள் எந்தவொரு சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறைகளின் விதிகளும் மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID 2041464)
PKV/KPG/KR
(Release ID: 2041614)
Visitor Counter : 57