சுற்றுலா அமைச்சகம்
இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற சுற்றுலாத் துறையும் பெரிய பங்களிப்பை வழங்கும்: மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
Posted On:
03 AUG 2024 4:51PM by PIB Chennai
இந்தியா இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸ்போ (ஐஹெச்இ 2024) எனப்படும் இந்திய சர்வதேச விருந்தோம்பல் கண்காட்சியின் 7-வது பதிப்பை இன்று (03-08-2024) தில்லியில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விருந்தோம்பல் துறையை முன்னேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஐஹெச்இ கொண்டிருந்ததாக கூறினார். இது இந்திய விருந்தோம்பல் துறையை வளர்ப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல எனவும் இது விருந்தோம்பல் துறையின் மையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனைக்கு சுற்றுலாத் துறை பெரிய அளவில் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மேலும் கூறினார். உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் துறைக்குத் தேவையான அனைத்து வளங்களும் இந்தியாவிடல் உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் பன்முகத்தன்மை, புதிய வணிக வாய்ப்புகள் உள்ளதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
ஐஹெச்இ 2024 இந்தியாவின் முதன்மையான விருந்தோம்பல் கண்காட்சியாக உள்ளது. இந்த ஆண்டு இது 2024 ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறுகிறது. ஆடம்பர ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்கள், உணவகங்கள், கிளவுட் சமையலறைகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் 20,000-க்கும் மேற்பட்ட இந்த தொழில்துறை சார்ந்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
***
PLM/DL
(Release ID: 2041151)
Visitor Counter : 58