பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நல்லாட்சிக்கான தேசிய மையம், இலங்கையின் குடிமைப் பணி அதிகாரிகள், ஊழியர்களுக்கான 4-வது திறன் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
03 AUG 2024 12:46PM by PIB Chennai
நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) புதுதில்லியில் இன்று (03-08-2024) இலங்கையின் குடிமைப் பணி அதிகாரிகள், ஊழியர்களுக்கான 4 வது திறன் மேம்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் மண்டல உதவி செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் என 40 சிவில் சேவை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் இலங்கையின் ஊராட்சி, பொது நிர்வாகம், மாகாண சபைகள், நீதி, சிறைச்சாலைகள், போன்ற இலங்கையின் முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய பசுமை நல்லாட்சி மையத்தின் தலைமை இயக்குநரும், மத்திய நிர்வாக சீர்திருத்தம் - பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு வி. ஸ்ரீனிவாஸ் நிறைவு விழாவில் உரையாற்றினார். இலங்கையின் நிர்வாக முன்னேற்றங்களை அவர் எடுத்துரைத்தார். பரஸ்பர அறிவுசார் பரிமாற்றம் மூலம் இரு நாடுகளும் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்ட முடியும் என்று அவர் கூறினார்.
இந்த அமர்வில் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்பாளர்களின் நான்கு குழு விவாதங்களும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் போது, இணை பேராசிரியரும் பாடநெறி ஒருங்கிணைப்பாளரும் டாக்டர் ஏ.பி.சிங், பயிற்சித் திட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார்.
***
PLM/DL
(Release ID: 2041122)
Visitor Counter : 51