உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதப்படுத்துதல் துறையில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்
Posted On:
02 AUG 2024 7:20PM by PIB Chennai
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறையில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக 2024 பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் ஆர்வமுள்ள தலைமைத்துவ, வழிகாட்டிகளுக்கான புத்தொழில் மன்றம் என்ற புத்தொழில் மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் அறிவுசார் அமர்வு, குழு விவாதம், கட்டமைப்பு அமர்வு மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் புதுமையான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.
ஹரியானா மாநிலம் குண்ட்லியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் - மேலாண்மை நிறுவனம் (NIFTEM-K), தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் - மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) ஆகிய இரண்டு தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் 38 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6 நிறுவனங்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான புத்தொழில் போட்டியில் வெற்றி பெற்றன. இவற்றுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், ஆதரவு, பயிற்சி, முன்னோடி தொழில் அமைப்பு, அங்கீகாரம் பெற்ற உணவு பரிசோதனை ஆய்வகங்கள், தொழில் பாதுகாப்பு சேவைகள், தர சோதனை, ஆராய்ச்சி - மேம்பாட்டு ஆதரவு, கட்டமைப்பு வாய்ப்புகள் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.
உணவு, அதனைச் சார்ந்த துறைகளில் உள்ள இந்த புத்தொழில் நிறுவனங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குதல், புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு வருதல், உணவுப் பதப்படுத்துதலில் உற்பத்தித்திறன், செயல்திறனை அதிகரித்தல், தொழில்முனைவை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகள் - திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி, உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/DL
(Release ID: 2041108)
Visitor Counter : 48