கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
2013-14 முதல் நீர்வழிப் பாதைகளில் சரக்குப் போக்குவரத்து ஆறு மடங்கு அதிகரிப்பு
Posted On:
02 AUG 2024 6:44PM by PIB Chennai
மக்களவையில் இன்று திரு பிப்லப் குமார் தேப் மற்றும் திரு சங்கர் லால்வானி எழுப்பிய கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் எழுத்து மூலம் பதிலளித்தார்.
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசிய நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். 2013-14 முதல், இந்த நீர்வழிகள் வழியாக கொண்டு செல்லப்படும் சரக்குகளின் அளவு அதிவேக உயர்வைக் கண்டுள்ளது, கையாளப்பட்ட மொத்த சரக்கு 2014-15 நிதியாண்டில் 29.16 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து நிதியாண்டு 2023-24 இல் 133.03 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 18.07% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது.
2013-14 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 18.07 மில்லியன் மெட்ரிக் டன் உடன் ஒப்பிடும்போது இந்த எழுச்சி ஆறு மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது. கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 மற்றும் கடல்சார் அமிர்தக்கால பார்வை 2047 ஆகியவற்றின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்குகளுடன், சரக்குப் போக்குவரத்தை மேலும் அதிகரிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது, 2030 க்குள் 200 மில்லியன் மெட்ரிக் டன் மற்றும் 2047 க்குள் 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2040915
*****
RB/DL
(Release ID: 2041102)
Visitor Counter : 58