அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய இயற்பியல் ஆய்வகம் ஒரு வாரம் ஒரு கருப்பொருள் திட்டத்தின் கீழ் விண்வெளி, மின்னணுவியல், கருவியியல் கருப்பொருளில் மூன்று நாள் நிகழ்ச்சிகளை நடத்துகிறது
Posted On:
03 AUG 2024 10:09AM by PIB Chennai
அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) – தேசிய இயற்பியல் ஆய்வகம் (என்.பி.எல்) ஆகஸ்ட் 2 முதல் 4 வரை என்பிஎல் வளாகத்தில் விண்வெளி, மின்னணுவியல், கருவியியல் !(ஏஇஐஎஸ்எஸ்) கருப்பொருள் குறித்த மூன்று நாள் பயிலரங்கை நடத்துகிறது. அதன் ஒரு வாரம் ஒரு கருப்பொருள் முயற்சியின் ஒரு பகுதியாக சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஸ்.ஐ.ஓ, சி.எஸ்.ஐ.ஆர்-சி.இ.ஆர்.ஐ., சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.பி ஆய்வகங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
சி.எஸ்.ஐ.ஆர்-என்.பி.எல் இயக்குநர் திரு வேணுகோபால் அச்சந்தா தொடக்க நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து, சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஏ.எல் இயக்குநரும், ஏ.இ.ஐ.எஸ்.எஸ் கருப்பொருள் இயக்குநருமான டாக்டர் அபய் ஆனந்த் பஷில்கர் சிறப்புரையாற்றினார். இந்தக் கருப்பொருளை விரிவாக எடுத்துரைத்த அவர், தற்சார்பு பாரதம், மேக் இன் இந்தியா முயற்சிகளை அடைவதில் இதன் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.
சி.எஸ்.ஐ.ஆர்-சி.இ.இ.ஆர்.ஐ.யின் இயக்குநர் டாக்டர் பி.சி.பஞ்சரியா, தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் இந்தக் கருப்பொருளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். மென்மையான, நேரடியான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு ஒற்றை சாளர அமைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
பட்டறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.கே.துபே மூன்று நாள் நிகழ்ச்சித் திட்டத்தை விளக்கினார். இதில் மாணவர்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல் அமர்வு, ஸ்டார்ட்அப்/எம்எஸ்எம்இ/தொழில்துறை சந்திப்பு ஆகியவையும் அடங்கும். மாணவர்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
***
PLM/DL
(Release ID: 2041100)
Visitor Counter : 64