ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருவாய் கிராமங்களை சாலைகள் மூலம் இணைக்கும் திட்டம்

Posted On: 02 AUG 2024 5:57PM by PIB Chennai

ஊரகச் சாலைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், சமவெளிப் பகுதிகளில் 500 நபர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சாலை வசதி இல்லாத தகுதியான குடியிருப்புகளுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற ஒரே சாலை வசதியை வழங்குவதற்கான சிறப்பு திட்டமாகும். சிறப்புப் பிரிவு மாநிலங்கள் (அதாவது, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட்), பாலைவனப் பகுதிகள் (பாலைவன மேம்பாட்டுத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டவை), பழங்குடியினர் (அட்டவணை V) பகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மாவட்டங்கள் (உள்துறை அமைச்சகம் மற்றும் திட்டக் குழுவால் அடையாளம் காணப்பட்டவை) ஆகியவற்றைப் பொறுத்தவரை, 250 நபர்கள் மக்கள் தொகை கொண்ட சாலை இணைப்பு இல்லாத தகுதிவாய்ந்த குடியிருப்புகளை இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

 இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் (உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளபடி), 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 100 நபர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் என இத்திட்டத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வரை மொத்தம் 1,53,879 குடியிருப்பு பகுதிகளுக்கு பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2019 மற்றும் 2024 க்கு இடையில் மொத்தம் 8,848 குடியிருப்பு பகுதி இணைப்பு வழங்கப்பட்டது.

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

******

 

(Release ID: 2040882)

PLM/RS/DL


(Release ID: 2041020) Visitor Counter : 73