பாதுகாப்பு அமைச்சகம்
முன்னாள் படைவீரர்கள் நலனுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள்
Posted On:
02 AUG 2024 4:47PM by PIB Chennai
முன்னாள் படைவீரர் / விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும் மறுவாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் படை வீரர் நல நிதியின் கீழ் ஆயுதப்படை கொடிநாள் நிதியிலிருந்து பல்வேறு வகையான நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறாதவர்களுக்கும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது.
இருசக்கர வாகன நிதி, வீட்டுக் கடனுக்கான மானியம், பிரதமரின் கல்வி உதவித்தொகைத் திட்டம் போன்றவையும் முன்னாள் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்
மேலும் விவரங்களுக்கு் இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040796
---
PKV/KPG/DL
(Release ID: 2040956)