அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய இந்தி அறிவியல் மாநாடு 2024: இந்தி மொழியில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்தல்
Posted On:
01 AUG 2024 5:29PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-ஏ.எம்.பி.ஆர்.ஐ), விஞ்ஞான மண்டல மத்திய பாரத் மாகாணம், மத்திய பிரதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், போஜ் (திறந்தநிலை) பல்கலைக்கழகம், புது தில்லி மற்றும் போபாலில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தி பல்கலைக்கழகம், ஆகியவை "ராஷ்டிரிய இந்தி விக்யான் சம்மேளன் 2024" எனப்படும் தேசிய இந்திய அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்தன. ஜூலை 30 முதல் 31 வரை மாநாட்டின் நான்காவது பதிப்பு நடைபெற்றது
இந்த மாநாட்டின் முதன்மை நோக்கம், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படைப்புகளை இந்தியில் முன்வைக்கவும் விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்குவதும், இந்த மொழியின் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதை ஊக்குவிப்பதும் ஆகும். இந்த நிகழ்வை மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தொடங்கி வைத்தார், அவர் நமது சொந்த மொழியில் அறிவையும் அறிவியலையும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சி.எஸ்.ஐ.ஆர்-ஏ.எம்.பி.ஆர்.ஐ இயக்குநர் அவனிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தனது வரவேற்புரையில் இந்த மாநாட்டின் மூலம் இந்தி மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஜூலை 31 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் மத்தியப் பிரதேச துணை முதல்வர் திரு. ராஜேந்திர சுக்லா கலந்து கொண்டார். இந்த அமர்வின் போது, பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்-ஏ.எம்.பி.ஆர்.ஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யு) கையெழுத்தானது. இந்த மாநாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், ஆயுர்வேதம் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பு ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆறு அமர்வுகள் இடம்பெற்றன.
****************
PLM/RS/KV
(Release ID: 2040804)
Visitor Counter : 46