குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை

Posted On: 01 AUG 2024 4:56PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சந்தை அணுகல் மற்றும் இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், உறுதியான சந்தையை வழங்குவதன் மூலமும், அவற்றின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணையை 2012ஏப்ரல் 1முதல் அமல்படுத்துவதாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை MSMED சட்டம் 2006 இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2015 முதல் இந்த கொள்கை கட்டாயமாக்கப்பட்டது. மத்திய அமைச்சகங்கள்/துறைகள்/மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுக்கு 25% கொள்முதல் செய்ய வேண்டும் என்று, திருத்தப்பட்ட கொள்கை கட்டாயப்படுத்துகிறது, இதில் SC/ST க்கு சொந்தமான MSE-களிலிருந்து 4% மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு சொந்தமான MSE-களிலிருந்து 3% அடங்கும்.
2023-24 நிதியாண்டில் மத்திய அமைச்சகங்கள்/துறைகள்/மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், MSE நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்ளும் மொத்த கொள்முதல் ரூ.82,630.38 கோடி (36.06%).
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் செல்வி. ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

   

******************

MM/AG/KV


(Release ID: 2040717) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP