குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்.எஸ்.எம்.இ.களில் வேலை வாய்ப்புகள்
Posted On:
01 AUG 2024 4:54PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு (PMS) திட்டம், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSMSE), குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் (MSE-CDP), பாரம்பரிய தொழில்களை புத்துயிர் பெறச் செய்வதற்கான நிதித் திட்டம் (SFURTI), புதுமை, ஊரகத் தொழில் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டம் (ASPIRE) போன்றவை இதில் அடங்கும். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் முக்கிய நோக்கம், புதிய குறுந்தொழில்களை அமைப்பதன் மூலம், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மட்டுமே உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் Udyam மற்றும் Udyam Assist Platform (UAP)-ன் படி MSME துறையில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Udyam பதிவு மற்றும் Udyam அசிஸ்ட் தளங்களில் கிடைக்கும் தரவுகளின்படி, 2021-22 -ல் பதிவான 3.49 கோடி வேலைவாய்ப்புடன் ஒப்பிடும்போது, 2023-24 -ல் வேலைவாய்ப்பு 7.44 கோடியாக உள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு அலகுக்கும் சராசரியாக ஆண்டுக்கு 8 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, எம்எஸ்எம்இ-களுக்கான கடன் வழங்கல் 2022-23 நிதியாண்டில் 16.97 லட்சம் கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் 22.04 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எம்எஸ்எம்இ துறைக்கு அதிக கடன் வழங்கலைக் குறிக்கிறது. பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ், குறு நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் 2021-22 நிதியாண்டில் ரூ.8,773.23 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.9,385.00 கோடியாக அதிகரித்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ அலகுகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறையில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP):
உற்பத்திப் பிரிவுக்கான திட்டச்செலவு, அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், சேவைப் பிரிவுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் திருநங்கைகள் சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பால்பண்ணை, கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு, பூச்சிகள் (தேனீக்கள், பட்டுப்புழு வளர்ப்பு போன்றவை) போன்ற கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கொவிட் ஆண்டுகள், அதாவது 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் PMEGP இன் கீழ் 2-வது கடனுக்கு விண்ணப்பிக்கும் தற்போதுள்ள PMEGP / கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் / MUDRA அலகுகளின் லாபத்தைக் கருத்தில் கொண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ரூ.2 லட்சம் வரையிலான திட்ட மதிப்புக்கும், ரூ.5 லட்சம் வரையிலான திட்டங்களுக்கான குறுகிய கால பயிற்சிக்கும் (5 நாட்கள் வரை) தொழில் முனைவோர் மேம்பாட்டு விகிதம் கட்டாயமில்லை.
ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் கிடையாது.
MSEகளுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்: CGSMSE இன் கீழ், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) மூலம், MSEகளுக்கு ரூ.500 லட்சம் வரை (01.04.2023 முதல்) அடமானம் இல்லாத கடன்கள் பல்வேறு வகை கடன்களுக்கு 85% வரை உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன.
பதிவு பெற்ற முறைசாரா குறுந்தொழில் நிறுவனங்கள் முன்னுரிமைத் துறைக் கடன்களின் பலன்களைப் பெற, முறைசாரா குறுந்தொழில் நிறுவனங்களை முறையான வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக உதயம் இணைய தளம் தொடங்கப்பட்டது.
கடன் நோக்கத்திற்காக 02.07.2021 முதல் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக சேர்த்தல்.
எம்.எஸ்.எம்.இ.களின் நிலை உயர்ந்தால், வரி அல்லாத சலுகைகள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
17.09.2023 அன்று "பிரதமரின் விஸ்வகர்மா" திட்டம் தொடங்கப்பட்டது, இது 18 பாரம்பரிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளுக்கு கடன் ஆதரவு, திறன் பயிற்சி, சந்தைப்படுத்தல் ஆதரவு போன்ற பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டம் Udyam Assist தளத்தில் உள்ள பயனாளிகளை முறையான MSME சூழலியல் அமைப்பில் "தொழில்முனைவோராக" இணைக்கும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி. ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***************
MM/AG/KV
(Release ID: 2040712)
Visitor Counter : 62