கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கங்கை நதி வழியாக போக்குவரத்து
Posted On:
02 AUG 2024 1:58PM by PIB Chennai
கங்கா – பாகீரதி – ஹூக்ளி நதி அமைப்பின் ஹால்டியா – வாரணாசி வழித்தடத்தில் தேசிய நீர்வழிப்பாதைகள் -I (NW-I) திறனை அதிகரிப்பதற்கான ஜல் மார்க் விகாஸ் திட்டத்திற்கு 2018 ஜனவரி 3 அன்று அரசு ஒப்புதல் அளித்தது. மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான இந்திய உள்நாட்டு நீர்வழிப் பாதை ஆணையம் (IWAI) உலக வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நீர் வழிப் போக்குவரத்து வளர்ச்சித் திட்டம் எனப்படும் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ், வாரணாசியில் மில்கிபூர் கிராம சபாவை ஒட்டியுள்ள ரால்ஹுபூர் கிராம சபையில் பல்வகை முனையம் (எம்எம்டி) உருவாக்கப்பட்டுள்ளது. எம்.எம்.டி.யில் இருந்து சரக்குகளின் சோதனை நகர்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் அமலாக்கம் உலக வங்கியுடன் கலந்தாலோசித்து 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PLM/RS/KV
(Release ID: 2040710)
Visitor Counter : 57