குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தரத் தொழில் சார்ந்த ஏற்றுமதியாளர்கள்

Posted On: 01 AUG 2024 4:59PM by PIB Chennai

நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எளிதாகக் கடன் பெறுவதற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கை முன்முயற்சிகள் மூலம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. செயல்படுத்தப்பட்ட சில திட்டங்கள் பின்வருமாறு:
i. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையம் மற்றும் மூன்றாம் தரப்பு உத்திரவாதம் இன்றி, அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் வழங்க குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ii. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்பது குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, பெரிய கடனுடன் இணைந்த மானியத் திட்டமாகும்.
iii. பிரதமரின் முத்ரா திட்டம் (PMMY) ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடனை வழங்குகிறது.
iv. ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம், ஷெட்யூல்டு வணிக வங்கிகளிடமிருந்து ஒரு வங்கிக் கிளைக்கு குறைந்தபட்சம் ஒரு ஷெட்யூல்டு வகுப்பினர் (எஸ்சி) அல்லது ஷெட்யூல்டு பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் ஒரு பெண் கடன் வாங்குபவருக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கடன் வழங்க உதவுகிறது.
v. பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், உள்ளடக்கிய 18 வர்த்தகங்களில் கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளுக்கு கடன் ஆதரவு உட்பட முழுமையான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
vi. முறைசாரா குறுந்தொழில் நிறுவனங்களை (IMEs) எம்எஸ்எம்இ-ன் முறையான வரம்பிற்குள் கொண்டுவர 11.01.2023 அன்று Udyam Assist தளம் தொடங்கப்பட்டது.
viii. முன்னுரிமைத் துறைக் கடனுதவி பெறும் நோக்கத்திற்காக சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக 02.07.2021 முதல் சேர்த்தல். 
MSME அமைச்சகம் சர்வதேச ஒத்துழைப்பு (IC) திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் நடைபெறும் பன்னாட்டுக் கண்காட்சிகள், பொருட்காட்சிகள் மற்றும் வாங்குவோர்-விற்போர் சந்திப்புகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக, தகுதிவாய்ந்த மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்களுக்கு நிதி ஈடுசெய்யும் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும். கூடுதலாக, ஜூன் 2022-ல் தொடங்கப்பட்ட முதல் முறை ஏற்றுமதியாளர்களின் திறன் மேம்பாடு (CBFTE) என்ற IC திட்டத்தின் புதிய கூறுபாட்டின் கீழ், புதிய மைக்ரோ & சிறு  தொழில் நிறுவனங்கள் (MSEs) ஏற்றுமதியாளர்களுக்கு பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (RCMC), ஏற்றுமதி காப்பீட்டு பிரீமியம், ஏற்றுமதிக்கான சோதனை, தரச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏற்படும் செலவுகளுக்கு திருப்பிச் செலுத்தப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் உள்ள ஏற்றுமதியாளர்கள், பன்னாட்டு சந்தைகளை அணுகுவதை அதிகரிக்க சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த இடையீடுகள் உதவுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் நாடு முழுவதும் 60 ஏற்றுமதி உதவி மையங்களை அமைத்துள்ளது.
மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக்கும் முயற்சியாக, மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்றுமதி வாய்ப்புள்ள தயாரிப்புகள் / சேவைகள், மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மாவட்ட அளவில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (டிஇபிசி) ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம், அமைப்பு ரீதியான   நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் கீழ், விநியோகச் சங்கிலியில் தற்போதுள்ள இடையூறுகளை விவரித்து, தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கான சாத்தியமான தலையீடுகளைக் கண்டறியும் மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. "ஏற்றுமதி மையங்களாக" உள்ள மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, பிராந்திய அதிகாரிகள் மூலம், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுடன் இணைந்து ஏற்றுமதி மேம்பாட்டு தொலைநோக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை அமர்வுகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகள் இதில் அடங்கும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

******************

MM/AG/KV


(Release ID: 2040621) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi