இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ வசதிகள், காப்பீட்டுத் தொகை வசதிகளை அதிகரித்தல்

प्रविष्टि तिथि: 01 AUG 2024 5:28PM by PIB Chennai

மாநிலங்களவையில் 'விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ வசதிகள்' குறித்த கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பின்வருமாறு தெரிவித்தார்.
இந்த அமைச்சகத்தின் 'தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம்' (என்.சி.எஸ்.எஸ்.ஆர்) திட்டத்தின் கீழ், பல்வேறு மையங்களில் மருத்துவ பராமரிப்பு மற்றும் விளையாட்டு வீரர்களின் காயங்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கமான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை நிர்வகிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் அறிவியல்  உதவி ஊழியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அணுகுமுறையில் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் காயத் தடுப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கையாள்வதும் அடங்கும். NCSSR மருத்துவ வசதி விளையாட்டு மருந்துகளில் நிபுணத்துவம் பெற்றது மற்றும் அந்தந்த மையம் மற்றும் மருத்துவக் குழு மூலம் விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மேம்பட்ட நோயறிதலை வழங்குகிறது. மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) கீழ் உள்ள மத்திய தடகள காய மேலாண்மை அமைப்பு (CAIMS) நாட்டில் விளையாட்டு மருத்துவத்தை வலுப்படுத்த உதவியுள்ளது.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலத் திட்டம் என்ற திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.10.00 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையங்களுக்குள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் உபகரணங்களின் இருப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன

******************

PLM/KPG/KV


(रिलीज़ आईडी: 2040599) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP